×

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாவது; வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மலை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை, உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 2-ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெளியின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காடு, சேலம்-7 செ.மீ., திருப்பூரில்- 6 செ.மீ., போச்சம்பள்ளி, ஓமலூரில்- 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 35-ல் இருந்து 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் வானம் வேகமூட்டத்துடன் பகல் நேர வெப்பம் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : places ,weather center ,Tamil Nadu , Tamil Nadu, thunder and lightning, cyclone, heavy rain, the weather center
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...