×

வெங்கலம் அரசு பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு மதிய உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவ மாணவர்கள் தெருவில் அலையும் அவலம்

* நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்

பெரம்பலூர் : வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சனை. மதிய உணவு சாப்பிட்டு விட்டு கை கழுவ தண்ணீர் இல்லாததால் தெருக்களில் அலையும் மாணவர்களின் அவல நிலை உள்ளது. பெரம்பலூர் மாவட்ட அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தால் கடுமை யான வறட்சி நிலவிவருகிறது. குறி ப்பாக மாவட்ட அளவில் பொதுப்பணித்து றை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது. இவைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளி லும் குடிநீர் அதலபாதாளத்திற்கு சென்ற தால் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்கவே தண்ணீரின்றி உள் ளாட்சி அமைப்புகள் திண்டாடி வருகின் றன. இதனால் மாவட்ட அளவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன.

தமிழக அளவில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் அதனை தீர்ப்பதற்காக போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்வராததே பொதுமக்களின் போராட்டங்களுக்கான முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கான குடிநீர் தேவை யை ஊராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்யாததால் கடந்த இரண்டுவருடங்களாக இப் பள்ளி மாணவ மாணவியர் குடிநீருக்கா கவும், சாப்பிட்டப்பிறகு கைகளைக் கழு வவும், சாப்பிட்ட டிபன் பாக்ஸ்களைக் கழு வுவதற்காகவும் தண்ணீர் வசதியின்றி திண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அக்கறை எடுக்காததால், மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவியர் தாங்களாகவே பள் ளியை விட்டு வெளியேறி, தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களை தேடிச் செல்கி ன்றனர். அல்லது தெருக்களில் உள்ள வீடுகளில் கெஞ்சிக்கூத்தாடி தண்ணீர் வாங்கி டிபன் பாக்ஸ்களைக் கழுவிக் கொண்டு பிறகு பள்ளிக்குவருகின்றனர். ஓராண்டாக நீடித்து வந்த இந்த பிரச்ச னை குறித்து தினகரன் நாளிதழ் கடந்த 6 மாதங்களுக்குமுன்பு சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது .இதனைத் தொடர்ந்து அரும்பாவூர்பகுதி விக்டரி லயன்ஸ்கிளப் சார்பாக பள்ளி வளாகத்தில் மின்மோட்டார் வசதியுடன் போர்வெல் அமைத்து தரப்பட்டது. தற்போது நிலவி வரும் கடு மையான தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு இந்த போர்வெல் குழாயும் ஈடுகட்ட முடியாமல் தண்ணீர் கீழே சென்று விட்டது.

மாணவ மாணவியரின் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையைத் தீர்ப்பதற்காக பள்ளி நிர்வாகமோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமோ நிரந்தரத் தீர்வுகாணாததால் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கு பள்ளி வகுப்புகள் திறந்த பிறகு, மீண்டும் குடிக்கவும் சாப்பி ட்ட பிறகு, கை கழுவவும் டிபன் பாக்ஸ்க ளைக் கழுவவும் தெருக்களில் மாணவ. மாணவியர் தஞ்சம்புகுந்து வருகின்ற னர். பருவ வயதை எட்டிய மாணவிகள் பலரும் ஆபத்தான நிலையில் தெருக்க ளில் அலைந்து திரிந்து தண்ணீரைத் தேடுவது பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை ஆசிரியர்கள் உணராத நிலையில், மாணவ மாணவியரின் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வா கமோ அல்லது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lunch ,Vengalam Government School ,street , Government School , wash hands,students, roaming in street
× RELATED சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்...