×

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்,.. புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சென்னை: தமிழ்கம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை, வீடுகளில் இனிப்பு பரிமாறி ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை,டெல்லியில் உள்ள மசூதிகளில் நடக்கும் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும்  கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.  ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள்.  இதை தொடர்ந்து நோன்பு நிறைவடைந்த பிறகு பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயுப், பிறை தெரிந்ததாகவும் ரம்ஜான் பண்டிகை  கொண்டாடப்படுவதையும் அறிவிப்பாக வெளியிட்டார்.  

இன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் ரம்ஜான் வாழ்த்து கூறி வருகின்றனர். காலையிலிருந்தே பள்ளி வாசல்கள் முன் திரளும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்தும் இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நாளின் முக்கிய நிகழ்வான பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags : celebration ,party ,country ,places ,
× RELATED அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்;...