×

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சீன எல்லையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரம்

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றபோது மாயமான இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக சரக்கு விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 என்ற சரக்க விமானம் நேற்று முன்தினம் பகல் புறப்பட்டு சென்றது. அருணாசல பிரதேசத்தில் உள்ள மெனுசுக்கா நோக்கி சென்ற அது, புறப்பட்ட 35 நிமிடங்களுக்கு பின்னர் விமான கட்டுப்பாடு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. அதில், ஊழியர்கள் உட்பட மொத்தம் 13 பேர் இருந்தனர். சீன எல்லைக்கு அருகில் விமானம் திடீரென மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விமானத்தை ேதடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக தேடப்பட்டு வருகிறது. காணாமல் போன அந்த விமானம் விபத்தில் சிக்கி இருப்பதாகவும்,  விபத்து நடந்த பகுதி அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chinese ,border , Fighter jets, helicopters, Chinese border,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...