×

சாதாரண பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும்

திருமலை: ‘‘சாதாரண பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, முக்கிய விஐபி.க்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டும்,’’ என்று வெங்கையா நாயுடு அறிவுறுத்தி உள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாள் பயணமாக திருப்பதி வந்தார். நேற்று முன்தினம் இங்கு நடந்த தேசிய வானிலை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி,  குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தேன். முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு தரிசனத்துக்கு வர வேண்டும். இதன்மூலம், சாதாரண பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. நாட்டில் ஊழல், பசி இல்லாத சமூகம் அமைய வேண்டும். நான் அரசியலில் இப்போது இல்லை. மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. ஐக்கிய நாடுகளின் சபையில் பங்கேற்று உலக அமைதிக்காகவும், வன்முறையை ஒழிக்கவும் மக்கள் கருத்துகளை கேட்டு, அதற்கு ஏற்ப செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தீவிரவாதம் ஒழியவும், உலக அமைதி, இயற்கை, கலாசாரத்தை பாதுகாக்கவும் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupati ,devotees , Ordinary devotee, difficulty, Tirupathi
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்