×

எம்பி, எம்எல்ஏக்கள் தேர்தலில் அமமுக படுதோல்வி டிடிவி.தினகரன் கூடாரம் காலியாகிறது

சென்னை:  தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு தாவ முடிவு செய்து வருகிறார்கள். அதன்படி, திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் வி.முத்தையா, பேரவை இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜி.சின்னதுரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன் என்ற மூர்த்தி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், பாளையங்கோட்டை பகுதி செலாளர் ஏ.அசன்ஜாபர்அலி, புளியங்குடி நகர செயலாளர் எம்.சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகர செயலாளர் எஸ்.டி.சங்கரசுப்ரமணியன், செங்கோட்டை நகர செயலாளர்கள் யு.முத்தையா, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் ருசேவ், புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா பாலசுப்ரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்.மாரியப்பன், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் எஸ்.சின்னபாண்டி, சங்கரன்கோவில் நகர பேரவை செயலாளர் கே.சேகர், சாம்பவார் வடகரை பேரூராட்சி செயலாளர் ஜி.காமராஜ் ஆகியோர் நேற்று அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்பி, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவன் தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுக சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன் (மாவட்ட பேரவை செயலாளர்), கே.ராஜாராம் (மாவட்ட இணை செயலாளர்), வி.அப்பாதுரை (ஒன்றிய செயலாளர்) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த பூக்கடை எம்.முனுசாமி (தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர்), ஆர்.அசோக்குமார் (மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்) உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் முதல்வர் எடப்பாடியை நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது தர்மபுரி மாவட்ட செயலாளரும் உயர் கல்வி துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : DV Tinakaran , MB, MLA, Amma, DTV
× RELATED சீட் கொடுக்காததால் விரக்தி; நான்...