×

7ம் தேதி டிடிஎட் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வு என்னும் டிடிஎட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் 7ம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டயம் படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு 14ம் தேதி முதல் 28ம் தேதி வரையும், முதலாம் ஆண்டு தேர்வுகள் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரையும் நடக்கின்றன. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்துள்ள தனிதனி தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் 7ம் தேதி பிற்பகல் முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Tags : examination hall ,DTT , On 7th, DDT exam, Hall tickets
× RELATED பிளஸ்2 பொதுத்தேர்வை 17 ஆயிரம் மாணவர்கள்...