பாரிமுனையில் துணிகரம் வியாபாரியிடம் 8 லட்சம் பறிப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை வி.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஷித் (34). வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, ₹8 லட்சத்தை எடுத்து கொண்டு பாரிமுனைக்கு பைக்கில் புறப்பட்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து இன்னொரு பைக்கில் வந்த 2 பேர், திடீரென அப்துல் ரஷித்திடம் இருந்து பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசில் அப்துல் ரஷித் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், அப்துல் ரஷித்தின் அண்ணன் கவுஸ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.

அவர் அங்கிருந்து ₹10 லட்சம் அனுப்பி, இந்த பணத்தை 5 பேர் வங்கி கணக்குக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப கூறியுள்ளார். அப்துல் ரஷித், ஒருவரது வங்கி கணக்கில் ₹2 லட்சம் அனுப்பியுள்ளார்.இதனையடுத்து மீதமுள்ள ₹8 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்புவதற்காக எடுத்து கொண்டு பாரிமுனை சென்றுள்ளார். அப்போதுதான் மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இது ஹவாலா பணமா? யார்? யாருக்கு பணம் அனுப்ப கூறியுள்ளார்? என இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags : Climber, 8 lakhs,business
× RELATED எனது பயணத்தின்போது இந்தியாவுடன்...