×

மகளின் திருமணத்துக்காக 860 மரங்களை வெட்டிய கிராமவாசி இருமடங்கு மரங்களை நட உத்தரவு: வனத்துறை அதிரடி

பத்லாப்பூர்: மகளின் திருமணத்துக்காக 860 மரங்களை வெட்டிய தந்தைக்கு, நான்கு மாதத்துக்குள் இருமடங்கு மரங்களை நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் தஸ்ரத் கர்குடே. தனது மகளின் திருமண செலவுக்காகவும், மேடை அமைப்பதற்காகவும் வீட்டின் அருகே தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை  வனத்துறை அனுமதியின்றி வெட்டி விற்றுவிட்டார். இது குறித்து தெரிந்ததும் வனத்துறை அதிகாரிகள், தஸ்ரத்திடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். பிறகு, மரங்களை வெட்டிய அதே நிலத்தில் அடுத்த நான்கு மாதத்துக்குள் இரண்டு மடங்கு மரங்களை நட வேண்டும்.  அல்லது புதிய மரங்களுக்கான தொகையை வனத்துறையிடம்  செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வேணும்னா 2 அடி அடிச்சுக்குங்க சார்
தஸ்ரத் கர்குடேயின் சகோதரர் ஹர்சந்த் கர்குடே கூறுகையில், “எங்கள் குடும்பத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருமணம் நடந்தது. திருமண செலவுக்கு எங்கள் கையில் ₹50 ஆயிரம் கூட இல்லை. எனவே, வேறு வழியின்றி,  எங்கள் நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி விற்று திருமணத்தை நடத்தினோம். மரங்களை வெட்டக்கூடாது என்று எங்களுக்கு தெரியாது. தவறு செய்து விட்டோம். அதற்காக எங்களை தண்டியுங்கள். நாங்கள் ஏழைகள். எங்களால் பணம்  செலுத்த இயலாது,” என்றார்.

Tags : villager , daughter's ,wedding, 860 trees,twice, Forest Action
× RELATED குடியாத்தம் அருகே மணல் கடத்தலை தடுக்க...