×

தோள்பட்டை காயம் தொடரில் இருந்து விலகினார் ஸ்டெயின்

தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த தென் ஆப்ரிக்க அணி வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் (35 வயது),  உலக கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அறுவை சிகிச்சை  செய்துகொண்ட ஸ்டெயின், அதன் பிறகும் முழு உடல்தகுதி பெற முடியாமல் தடுமாறி வந்தார். சமீபத்தில் நடந்த ஐபிஎல் டி20 தொடரிலும் அவர் இதே பிரச்னை காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்க அணி விளையாடிய  முதல் 2 போட்டியிலும் விளையாடாத ஸ்டெயின், இந்திய அணியுடன் இன்று நடக்க உள்ள போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில். ஸ்டெயின் உலக கோப்பையில் இருந்தே விலகி உள்ளது தென் ஆப்ரிக்க  அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவருக்கு பதிலாக மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : Steyn , Shoulderm injurymseries
× RELATED மிரட்ட காத்திருக்கும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள்: டேல் ஸ்டெயின் கணிப்பு