×

பைக் ரேஸ் கட்டமைப்பு மேம்படுத்த ஹோண்டா திட்டம்

சென்னை: இந்தியாவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கான கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஹோண்டா ஈடுபடும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மினோரு கட்டா தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த் மினோரு கட்டா கூறியதாவது: இந்தியாவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை மேம்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான  கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவது, திறமையான வீரர்களை கண்டறிந்து உலக தரத்தில் பயிற்சி அளிப்பது ஆகிய 2 முக்கிய திட்டங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறோம்.  அதற்காக அடுத்த ஓராண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை  திட்டமிட்டுள்ளோம்.வீரர்களின் திறனை கண்டறிய தேசிய அளவிலான போட்டிகளை நடத்த உள்ளோம்.   அதில் தேர்வாகும் வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு அனுப்பி வைப்போம். ஹோண்டா அணி சார்பில் 250சிசி பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்களுக்காக  கூடுதல் தரத்தில் புதிய மோட்டர் பைக்குகளை உருவாக்கி உள்ளோம்.

 சர்வதேச அளவிலான போட்டிகளை இந்தியாவில் உடனடியாக நடத்தும் திட்டமில்லை. தற்போதுள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டால் வாய்ப்பு உள்ளது. உலகின் சிறந்த மோட்டர் பந்தய வீரரை இந்தியாவில் இருந்து உருவாக்க வேண்டும்  என்பதே ஹோண்டாவின் இலக்கு. இவ்வாறு கட்டா தெரிவித்தார்.துணைத் தலைவர் பிரபு நாகராஜ் பேசும்போது, ‘புதிய திறமைகளை  கண்டறிய சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.  சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு முகாம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு 150 சிசி போட்டியில்  பங்கேற்க 20 வீரர்களை தேர்வு செய்தோம். அவர்களில் 8 பேர் 250 சிசி போட்டிகளில் பங்கேற்கின்றனர். இன்னும் 2 ஆண்டுளில் அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இந்த ஆண்டும் வீரர்களை தேர்வு செய்யும் முகாம் 5 நகரங்களில் நடைபெற உள்ளன. தேசிய அளவிலான  பந்தயங்களை நடத்த உள்ளோம். முதல் போட்டி கோவையில் இந்த வார இறுதியிலும்,  ஜூலை மாதம் முதல் வாரத்தில்  சென்னையிலும் நடைபெறும்’ என்றார். நிகழ்ச்சியில் தரம் உயர்த்தப்பட்ட 250 சிசி மோட்டார் பந்தய பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Tags : Honda , Bike Race ,Framework,improve
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...