×

சாம்பியன்ஸ் டிராபி தோல்வியில் பாடம் கற்றுக் கொண்டோம்...

2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றபோது பல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். இனி அதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.  பலவீனங்களை சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நடு கட்ட ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்துவதற்காகவே மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களை அணியில் சேர்த்தோம். சாம்பியன்ஸ் டிராபியில்  விளையாடிய அணியை விட தற்போதைய இந்திய அணி பலம் வாய்ந்தது. நடப்பு உலக கோப்பையின் முதல் வாரம் மிக சுவாரசியமாக இருந்தது.

சில போட்டிகளில் குறிப்பிட்ட அணிகள் ஆதிக்கம் செலுத்தி எளிதாக வென்றன. சில போட்டிகள்  கடைசி வரை கடும் போராட்டமாக அமைந்தன. மொத்தத்தில் பதற்றமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகள் வெற்றி பெற்றன. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் எங்கள் அனுபவத்தை பயன்படுத்தி சரியான  முடிவுகளை எடுக்க வேண்டும். நெருக்கடியான கட்டங்களை திறம்பட சமாளிக்கும் அணியே கோப்பையை வெல்லும்.- இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி



Tags : lesson , Champions ,Trophy ,defeat ...
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...