×

செங்கோட்டையில் பொதிகை ரயிலில் திடீர் தீ 100 பயணிகள் உயிர் தப்பினர்

செங்கோட்டை: சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இன்று காலை பொதிகை ரயில் வந்துகொண்டிருந்தது. செங்கோட்டை ரயில் நிலையம் அருகே பிரேக் பிடிக்கும்போது இன்ஜினின் அடிப்பாகத்தில் கட்டைகள் உரசியதால் லேசான தீப்பற்றியது. புகை  வெளியேறியதை கண்டு அதனை இன்ஜின் டிரைவர்கள் உடனடியாக தீயணைக்கும் கருவியை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ரயில் செங்கோட்டை ரயில்வே கேட்டில் நிறுத்தப்பட்டது.

ரயில் நிலையத்திற்கு சுமார் 300 அடிக்கு முன்பாக ரயில் நிறுத்தப்பட்டதால் கேட் அடைக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்களாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இதனால் ரயில்வே கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற. சுமார் 100 பயணிகள் மட்டுமே ரயிலில் இருந்தனர். தீ அணைக்கப்பட்டதும் ரயில், நிலையத்திற்கு சென்றடைந்தது. அங்கு இன்ஜின் பகுதியில் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்பிஎப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 100 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Tags : passengers ,Chengott , Red Fort, Packing Train, Fire, Passenger
× RELATED சேலம் – கொச்சி விமானம் திடீர் ரத்து: 50...