×

திருவில்லிபுத்தூர் அருகே பராமரிப்பின்றி சிதையும் புராதன கால கற்சிலைகள்

*பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவில்லிபுத்தூர் :  திருவில்லிபுத்தூர் அருகே பராமரிப்பின்றி சிதைந்து வரும் புராதன கற்சிலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே சுரைக்காய்பட்டி பகுதியில் தொன்மையான கற்சிலைகள் அதிகமாக உள்ளன. இந்த  புராதன சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. இந்த கற்சிலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் துள்ளுகுட்டி கூறியதாவது :நமது பண்டைய மரபுகளை, முன்னோர்கள்  குகை ஒவியங்கள் மூலம் தெரியப்படுத்தினர். அதன்பின் வந்த நாகரீக சமூகம்  எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினர்.

இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி காரணமாக வீரதீரச்செயல்கள் புரிந்தவர்களை போற்றும்விதமாகவும், பின்வரும் சந்ததிகள் அறியும்விதமாகவும், கற்சிலைகளை அமைத்து வரலாறுகளை சொல்லிச் சென்றனர். இத்தகைய கற்சிலைகள் மூலம், முன்னோர்களின்  வரலாறுகளையும், நாகரீகத்தின் தொன்மையையும் அறிய முடிகிறது. இத்தகைய,  வரலாற்று சின்னங்களின் நன்மை தெரியாமல் சிதைக்கப்படுகிறது.

alignment=


இவைகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். இதுபோன்ற புராதன சின்னங்கள் குறித்து தொல்லியல் துறையினர், மாவட்ட அருங்காட்சியகம், கலெக்டர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கற்சிலைகள் பராமரிப்பில்லாமல் உள்ளது. இவைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : cenotaphs ,Srivilliputhur , Srivilluputhur ,Historic Old statues, people worry
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...