×

கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: கோடி கணக்கில் பொருட்கள் நாசமானதாக தகவல்

சென்னை: சென்னையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ  விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதமாகின. சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம்  பகுதியில் உள்ள சிப்காட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வெகுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலாக இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, தீ விபத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், 14 இயந்திரங்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்பட்டுள்ளது. தகவல் அரிது விரைந்து வந்த போலீசார் தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்வெர்ட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கடந்த மாதம் சென்னை அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சோப்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மே 22ம் தேதி காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தொழிற்சாலையில் இருந்த ரசாயணங்களில் தீப்பற்றியதால் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றியது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் பல அடி உயரத்துக்கு புகை வெளியானது. தகவலறிந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்து காரணமாக பலமணி நேரம் அப்பகுதி புகை மண்டலமாகவே காட்சியளித்தது.

Tags : fire ,factory ,parts , Chennai, fire, car, factory
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா