×

ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடானில் பெரும் போராட்டம்: மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தல்

சூடான்: மக்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்துள்ள சூடான் ராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டில் 9 மாதங்களில் மக்களாட்சி ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கின்றனர். அதிபர் ஓமர்அல்பஷீர்  பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கு மீண்டும் மக்களாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் காத்துமில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு  நடத்தியது.

இதில் 35 பேர் உயிர் இழந்தனர். மக்களின் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் அங்கு விரைவில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. மேலும் எதிர்க்கட்சிகள் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ள சூடான் ராணுவம் 9 மாதங்களில் வெளிப்படையான பொது தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனும், ஐக்கிய நாடுகள் சபையும் மக்களாட்சிக்கு திரும்பும் சூடான் ராணுவத்தின் முடிவை வரவேற்றிருக்கின்றனர். தேர்தல் குறித்த அறிவிப்பே ராணுவம் வெளியிட்டு இருப்பதால் சூடானில் பொதுமக்களின் போராட்டம் பல இடங்களில் முடிவுக்கு வந்து இருக்கிறது.


Tags : Sudan , Sudanese, military rule, resistance, struggle, democracy, emphasis
× RELATED சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு...