அசாமில் இருந்து புறப்பட்ட AN-32 என்ற போர் விமானம் மாயம்,..13 பேர் நிலை என்ன?...தேடுதல் பணி தீவிரம்

டாடோ: அசாமில் இருந்து நேற்று மதியம் 12.27 மணியளவில் புறப்பட்ட AN-32  ரக போர் விமானம் திடீரென மாயமானது. விமானத்தில் பயணித்த 13 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கிவில்லை. இதனை தொடர்ந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று 13 பேருடன் மாயமான இந்திய விமானப்படை போர் விமானத்தை தேடும் பணியில் விமானப்படை மற்றும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 13 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. C-130J என்ற விமானப்படை விமானம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக மாயமான இந்திய விமானப் படை ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தின் டாடோ என்ற இடத்தில் விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானதை தொடர்ந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டல்களின் தேடும் பணியின் போது விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பகல் 12.27 மணிக்கு ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட ஏஎன் 32 விமானத்துடனான தொடர்பு 1 மணிக்கு துண்டிக்கப்பட்டது. தொடர்பு துண்டிக்கப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறால் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது.
 
13 பேர் கதி என்ன?

அருணாச்சலப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில்  சென்ற 13 பேர் நிலை என்ன என்று தெரியவில்லை. விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானத்தில் 8 விமானிகளுடன் 5 பயணிகளும் சென்றிருந்தனர். விமானம் விழுந்து நொறிங்கிய இடத்தில் விமானிகள், பயணிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலம் ஜோர்கட் நகரில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் மாயமானதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசாமிலிருந்து அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற AN-32  வகையை சேர்ந்த விமானப்படை சரக்கு விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்ற ஏ.என் .32 ரக விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசாமில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம்  மாயமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதிக்கு 13 பேருடன் மதியம் 12.25 மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரமாக காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : War ,Assam , Assam, AN-32 fighter, missing, 13 passengers
× RELATED தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு...