×

அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சீனா எச்சரிக்கை: வர்த்தக போரால் இருநாடுகள் மோதல்

பீஜிங்: ‘அமெரிக்காவில் படிக்க விரும்பினால் விசா மறுப்பு, தாமதம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்’ என தங்கள் மாணவர்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா-அமெரிக்கா இடையே தற்போது வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்காவின் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. மேலும், தெற்கு சீன கடல் பகுதியில் சீனா ராணுவம் ஆதிக்கம் செலுத்துவதற்கும், அமெரிக்கா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையேயான மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ளது.அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சீனா மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதிகளவில் படிக்கின்றனர். கடந்தாண்டில், அமெரிக்காவில் படித்த சீன மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரம். அமெரிக்காவில் மொத்தம் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் 3ல் ஒரு பங்கு சீன மாணவர்கள். இவர்களால் அமெரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு 14 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பங்களை  வேவுபார்க்க மாணவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் சீனா பயன்படுத்துகிறது என அமெரிக்க புலனாய்வு (எப்பிஐ) இயக்குனர் கிரிஸ்டோபர் ரே கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டினார். சீன உளவுத்துறைகள் மூலமாக இந்தப் பணிகள் நடப்பதாகவும் அவர் கூறினார். இதனால், , சீன ராணுவ உதவியுடன் அமெரிக்காவில் படிக்கும் ஆராய்ச்சியாளர்களை அடையாளம் காணும் கட்டாயத்துக்கு அமெரிக்க அரசு தள்ளப்பட்டது.
சீன உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புடைய 30 மாணவர்களின் விசாக்களை, அமெரிக்கா கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது. சீன ஆராய்ச்சியாளர்கள் பலரின் 10 ஆண்டு கால அமெரிக்கா விசாவும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் விசா மறுப்பு, தாமதம் உட்பட பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என சீன நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன் மூலம், மாணவர்கள் அங்கு சென்று படிப்பதை தவிர்க்கும்படி மறைமுகமாக தெரிவித்துள்ளது.



Tags : China ,America ,countries ,trade war , study , United States, China warns, students
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...