×

தீவிரவாதிகளை தொடர்ந்து ஜம்முவை மிரட்டும் ஜட்டி கொள்ளையர்: வைரல் வீடியோவால் மக்கள் பீதி

ஜம்மு: ஜம்முவில் இரவு நேரத்தில் ஜட்டியுடன் வந்து வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் நூதன கொள்ளை கும்பலால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரத்தில் ஜட்டி மட்டுமே அணிந்து வரும் கும்பல் ஒன்று பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வருகின்றது. இந்நிலையில் நகரில் தெரு ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவியில் இந்த கொள்ளை கும்பல் திருட்டில் ஈடுபடும் காட்சி பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. உள்ளாடை மட்டுமே அணிந்துள்ள 5 இளைஞர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழையும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சியால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த வீடியோவால் போலீசாரும் தற்போது உஷாராகி உள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “நாங்கள் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன. தீவிரமாக நாங்கள் கண்காணித்து வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்” என்றார். தீவிரவாதிகளால் ஏற்கனவே பீதியில் உள்ள காஷ்மீர் மாநில மக்கள், இப்போது ஜட்டி கொள்ளையர்களாலும் பயப்பட வேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது.



Tags : terrorists, Intimidate, Jammu,
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...