×

2வது டெஸ்டிலும் இலங்கை ஏ தோல்வி தொடரை வென்றது இந்தியா ஏ

ஹூப்ளி: இலங்கை ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அங்கீகாரமற்றது), 152 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹூப்ளி நேரு ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 269 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு  சுருண்டது. அடுத்து 57 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 372 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 430 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்தது.சிறப்பாக விளையாடிய பானுகா ராஜபக்ச 110 ரன் விளாசினார்.  கமிந்து மெண்டிஸ் 33 ரன், சந்தகன் 2 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

சந்தகன் 8, கமிந்து 46, விஷ்வா பெர்னாண்டோ 32 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இலங்கை ஏ அணி 2வது இன்னிங்சில் 277 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (66.4 ஓவர்). லாகிரு குமாரா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ  பந்துவீச்சில் ராகுல் சாஹர் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் (20.4-0-112-5). துபே 2, சந்தீப் வாரியர், சர்வதே, ஜெயந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கர் பரத் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இந்தியா ஏ அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. முதல் போட்டி பெல்காமில் நாளை மறுநாள் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.




Tags : Sri Lanka ,Test , Sri Lanka A ,fail , India won ,
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...