×

லுங்கி என்ஜிடி காயம் தென் ஆப்ரிக்காவுக்கு பெரும் பின்னடைவு

தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு, வேகப் பந்துவீச்சாளர் லுங்கி என்ஜிடி காயம் அடைந்துள்ளது மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம்  மண்ணைக் கவ்விய தென் ஆப்ரிக்கா, நேற்று முன்தினம் வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியின்போது முன்னணி வேகம் லுங்கி என்ஜிடி தசைப்பிடிப்பு காரணமாக வெளியேற நேரிட்டது. அவர் முழு  உடல்தகுதி பெற மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்ரிக் தோல்வியை  தவிர்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு இது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே கேப்டன் டு பிளெஸ்ஸி, ஹாஷிம் அம்லா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.




Tags : Lungi NG ,South Africa , Lunky Eng, injured,South Africa
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...