×

இந்தி பாடம் கட்டாயத்தை திரும்ப பெற்றது மகிழ்ச்சி: ராமதாஸ் டிவிட்

சென்னை: தேசிய கல்விக்கொள்கையில் இந்திப்பாடம் கட்டாயம் என்பதை திரும்பப்பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேசியக் கல்விக் கொள்கையில் இந்திப் பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்பப்பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும். சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இந்தத் திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பாமக தான் என்பதை மக்கள் உணர்வார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Hindi lesson, Ramadoss
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...