×

கோடநாடு கொலை வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி: ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி நடந்த கொள்ளை, கொலை வழக்கில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான வாளையார் மனோஜ், தனக்கு சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியேயும் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின்பு கோடநாடு கொலை வழக்கு நேற்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், சயான், வாளையார் மனோஜ் உட்பட 9 பேர் ஆஜராகினர். சதீஷன், வேறு ஒரு வழக்கில் கேரளா சிறையில் உள்ளதால், அவர் மட்டும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ஜம்சீர் அலி, விபத்தில்  சிக்கியதால் இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த வாய்தாவில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உரிய மருத்துவ சான்றுகளுடன் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Kodanad , Kodanad, murder case, adjournment on 12th
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை