தமிழகம் சமூக நீதி மண் என்பதை நிரூபிக்கும்: வேல்முருகன் சூளுரை

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: இதுதான் சமூகநீதியின் மண். இதுதான் தமிழர் நிலம். இதுதான் தமிழர் பூமி. தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டு அகாம்பாவத்தோடு திமிரோடு பேசக் கூடாதவற்றை எல்லாம் பேசினார்கள். அத்தனை பேச்சுகளையும் புறந்தள்ளி மக்களை சந்தித்த தலைமைக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் திமுகவின் இந்த மாபெரும் வெற்றி. நரேந்திர மோடியை எதிர்க்க திமுக ஒரு மகத்தான அணியை கட்டமைத்து இருக்கிறது. எந்த திசையில் இந்தி நுழைந்தாலும், ஹைட்ரோ கார்பன் நுழைந்தாலும் அதை உடைத்தெறிந்து இது சமூகநீதிமண் என்பதை தமிழகம் நிரூபிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, social justice, prove, Velmurugan, vuluru
× RELATED பிஸ்ட் பால்: தமிழ்நாடு சாம்பியன்