×

கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை: ஈஸ்வரன்

சென்னை: கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது: திடீரென்று தளபதி என்னை அழைத்தார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் மாநாடு ஒன்று போட வேண்டும். அதில் நீ கலந்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது எனக்கு புரியவில்லை. பிறகு சரி என்று சொன்னேன். நாமக்கல் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றபோது ஒரு லட்சம் அருந்ததியர்களை சந்தித்து பேசினேன்.
 
அவர்கள் என்னை வரவேற்றபோதுதான் திமுக தலைவரின் ராஜ தந்திரம் எனக்கு புரிந்தது. அப்படி ஒவ்வொரு செயலையும் ராஜ தந்திரத்தோடு அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவர் சொன்னது போல கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாற்றிவிட்டது. அதில் இனி யாரும் நுழைய முடியாது.


Tags : Divakas Fortress ,Isvaran , Kongu Zone, DMK, Fort, Eswaran
× RELATED தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்