×

கரு‌ணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு சலுகை: 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் திமுக தொண்டர்

கும்பகோணம்: கரு‌ணாநிதியின் பிறந்தநாளையொட்டி கும்பகோணத்தில் திமுக தொண்டர் ஒருவர் 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவர் 1969-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பதவியேற்ற அவர் மரணம் அடையும் திமுக தலைவராகவே இருந்தார். கருணாநிதி போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு. மறைந்த முன்னாள் திமுக தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்டுவதை முன்னிட்டு கும்பகோணத்தில் திமுக தொண்டர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு டீ வழங்குவதாக அறிவித்துள்ளார். சுப்பிரமணி என்பவர் ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். தீவிர திமுக தொண்டரான இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நாள் முழுவதும் தனது கடைக்கு வருபவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.


Tags : Debutant volunteer ,birthday ,Karunanidhi , Karunanidhi's birthday, Dee for 1 rupee, DMK volunteer
× RELATED 53வது பிறந்தநாள்: அஜித்துக்கு டுகாட்டி பைக் பரிசளித்த ஷாலினி