×

சதுரகிரி கோயிலில் அமாவாசை வழிபாடு

* பள்ளித் திறப்பால் பக்தர்கள் வருகை குறைவு

வத்திராயிருப்பு : வைகாசி அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலில் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் பக்தர்களின் வருகை பாதியாக குறைந்தது. வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு, அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இந்நிலையில், வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரியில் 3 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிரதோஷம், நேற்று அமாவாசை என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. கடந்த சித்திரை மாத அமாவாசை வழிபாட்டிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை சென்றனர். ஆனால், நேற்று 1,500க்கும் குறைவான பக்தர்களே வந்தனர்.

அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், பன்னீர் என 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவராம சூரியன் செய்திருந்தார். இன்றுடன் பக்தர்களுக்கான தரிசன அனுமதி முடிவடைகிறது.


Tags : moon ,Chaturagiri Temple , Devotees,Ammavasai ,Sathuragiri Temple
× RELATED விருச்சிகம்