×

சியாச்சின் ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள வீரத்தியாகிகளின் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி

டெல்லி : பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்கு வெளியே முதல் பயணமாக சியாச்சின் பனிமலையில் அமைந்துள்ள ராணுவ முகாமுக்கு ராஜ்நாத் சிங் சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சராசரியாக கடல்மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் ராணுவ முகாம் அமைந்துள்ளது. அங்கு குளிர்காலத்தில் மைனஸ் 60 டிகிரி வரை உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை இருக்கும்.

இந்நிலையில் தாய்நாட்டை காக்கும் பணியில், சியாச்சின் பனிமலையில் பணிபுரியும் வீரர்களின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்தார். மேலும் வீரர்களின் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சியாச்சின் பனிமலையைக் காக்கும் பணியில் 1100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறியுள்ள அவர், அத்தகைய வீரத்தியாகிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Tags : entrance ,heroes ,Rajnath Singh Anjali ,camp ,Siachen Army , Visited , Siachen base camp ,Rajnath Singh
× RELATED மயிலாடுதுறையில் பட்டண பிரவேச...