அசாம் மாநிலத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காணாமல் போனதாக தகவல்

ஜோர்கட்: அசாம் மாநிலம் ஜோர்கட் நகரில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் மாயமானதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசாமிலிருந்து அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற AN-32  வகையை சேர்ந்த விமானப்படை சரக்கு விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்ற ஏ.என் .32 ரக விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அசாமில் இருந்து புறப்பட்ட சரக்கு விமானம்  மாயமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதிக்கு 13 பேருடன் மதியம் 12.25 மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரமாக காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : passengers ,Indian Air Force ,Assam , Indian Air Force aircraft , 13 passengers, missing ,Assam
× RELATED வெடிக்கிறது புதிய சர்ச்சை:...