×

இணையதளத்தில் வைரலாகி வரும் ஆபத்தான வாக்கம் சேலஞ்ச்

வாஷிங்டன்: வாக்கம் சேலஞ்ச் (Vacuum) என்ற பெயரில் ஆபத்தான சவாலை பலரும் செய்து இணையதளத்தில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி வருகிறது. அந்த சவாலை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் தற்போது Vacuum Challenge என்ற பெயரில் சாவல் ஒன்று வைரலாகி வருகிறது. பலரும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

வாக்கம் சேலஞ்ச்;
இதில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வாக்கம் க்ளினரின் பைப்பை விட்டு, மற்றொருவர் ஆன் செய்கிறார். சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை, பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.

தற்போது இந்த சேலஞ்ச் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் இந்த ஆபத்தான சவாலை பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் என பலரும் செய்து அதன் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். டென் இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Diamond , Website, viral, dating site
× RELATED விகேபுரம் சேனைத்தலைவர் பள்ளி வைர விழா