×

80 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சிய கலைஞரின் பிறந்த நாள் இன்று

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவர் 1969-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பதவியேற்ற அவர் மரணம் அடையும் திமுக தலைவராகவே இருந்தார். கருணாநிதி போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

* கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்டார்

* 1957-ம் வருடம் தன்னுடைய 33 வயதிலேயே சட்டமன்றத்தில் நுழைந்தவர். 2018 ஆம் ஆண்டிலும் சட்டமன்றத்தில் இருப்பவர்.

* 1962-ம் வருடம் அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்கள் தோல்வி அடைந்தாலும், கருணாநிதி வெற்றி பெற்றார்.

* 1967-ம் சட்டப்பேரவை தேர்தலில் சைதாபேட்டையில் வெற்றி பெற்று, பொதுப்பணித்துறைக்கு அமைச்சரானார் கருணாநிதி.

* 1969-ம் ஆண்டு திமுக என்னும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி.

* கருப்பு கண்ணாடியை 1971 ஆம் ஆண்டு முதல் கருணாநிதி பயன்படுத்துகின்றார்.

* 1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் இதுவரை காணாத வரலாற்று வெற்றியாக 184 தொகுதியை கைப்பற்ற காரணமாக கருணாநிதி இருந்தார். அது இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது.

* 1975, ஜூன் 25 நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976, ஜனவரி 31-ம் தேதி தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்தது மத்திய அரசு.

* 1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி.

* 1991-ஆம் ஆண்டு காரணமே கூறாமல் மீண்டும் 356 பாய்ச்சப்பட்ட போதும் சிறிதும் அஞ்சாதவன். எதற்கும் அசராதவன். அடுத்து தேர்தலில் ஆட்சியை பிடித்தவன்.

* 2001 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்தாலும், 2004 பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதியைிலும் வெற்றிபெற்று சாதனை நாயகன் ஆனார்.

*  2006-ம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 96 இடங்களை பெற்றாலும் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தவர் கருணாநிதி.

* 60 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர்; தோல்வியை சந்திக்காத தலைவர் கலைஞர் கருணாநிதி

* 1957-ம் ஆண்டு குளித்தலை சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்ட கருணாநிதி 22,785 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எ.தர்மலிங்கம் 14,489 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கருணாநிதி முதன் முறையாக சட்டமன்றத்திற்கு சென்றார்.

* 1962-ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 1,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தஞ்சாவூரில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரிசுத்த நாடார்.

* 1967-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. இதில் 20,482 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.ஜி.வினாயகமூர்த்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 1971-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.காமலிங்கத்தை எதிர்த்து சைதாபேட்டை சட்டமன்ற தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டார். அதில் 12,511 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

* 1977-ம் ஆண்டு அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார். இதில் 16,438 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

* 1980-ம் ஆண்டு அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எச்.வி. ஹண்டே போட்டியிட்டார். இதில் 699 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.
 
* 1989-ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த கே.எ.வகாப்பை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

*. 1991-ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சுப்பு போட்டியிட்டார். இதில் 890 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

* 1996-ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 2001-ல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிஸ் வேட்பாளர் தாமோதரனை 4,834 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 2006-ம் ஆண்டு மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, சுயேட்சை வேட்பாளர் தாவுத் மியாகானை 8,526 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

* 2011-ம் ஆண்டு திருவாரூரில் போட்டியிட்டு 1,09,014 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் எம். இராசேந்திரனை தோற்கடித்தார். வாக்கு வித்தியாசம் 50,249.

* 2016-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை அவர் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வீழ்த்தினார்.


Tags : artist ,birthday ,Tamil , DMK leader, Karunanidhi, kalaignar, birthday, Tamil politics, MK Stalin
× RELATED 2023 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு