×

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு நீடிக்கிறது: சேலம் அருகே 4 இடங்களில் உண்ணாவிரதம்... 23 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு

சேலம்: சேலம் மற்றும் சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து உத்தமசோழபுரம், ஆச்சாங்குட்டப்பட்டி உள்பட நான்கு இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். முகத்தில் கருப்பு துணிகளை கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 277 கி.மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது. பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை அளித்து இந்த சாலை வரக்கூடாது. இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் அளித்து இந்த சாலை அமைக்கக்கூடாது என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் நீதிமனத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி இந்த திட்டத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாது அரசு ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் மத்திய அரசானது தற்போது உச்சநீதிமன்றத்தில் இதற்க்கு மேல்முறையீடு செய்துள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உச்சநீதிமன்றன் தங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தற்போது சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய 36 கி.மீட்டரில் வரக்கூடிய 23 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக உத்தமசோழபுரம் மட்டும் 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


Tags : places ,village participants ,Salem , 8 Lecture, Resistance, Salem, Fasting
× RELATED சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை