மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் இன்று முறைப்படி பொறுப்பேற்பு

புதுடெல்லி: மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் இன்று முறைப்படி பொறுப்பேற்றார். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக, கடந்த  மே 30ம் தேதி பதவி ஏற்றது. பிரதமருடன், மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் ஆகியோரும் பதவி ஏற்றனர். இதையடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Tags : Ravi Shankar Prasad ,Union Law Minister , Union Law Minister Ravi Shankar Prasad
× RELATED டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம்...