×

போராட்டத்தால் சாதித்துக் காட்டியவர் கலைஞர்... நினைவிடத்தில் மரியாதை செலுத்திய வைரமுத்து புகழாரம்

சென்னை : உணர்வு ரீதியாக கலைஞர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் 96-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் திரைப்படத்துறையினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கிய வைரமுத்து போராட்டத்தால் சாதித்து காட்டியவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.

கள்ளக்குடியில் தமிழை காப்பதற்கு, தண்டவாளத்தில் படுத்து போராட்டம்..
பாளையங்கோட்டை சிறையில் போராட்டம்...
பிறகு ஆட்சிக்கு வந்ததும் போராட்டம்...
ஆட்சி கலைக்கப்பட்டதும் போராட்டம்...
கட்சிகள் பிளவுற்றதும் போராட்டம்...
ஏன்...அவர் வாழ்வெல்லாம் போராட்டம்.. என்று சொல்வதை விட..
வாழ்ந்து மறைந்து பிறகும் போராட்டம்.. என்று சொல்ல வேண்டும்..

இதோ வங்கக்கலடலில் துயில் கொண்டிருக்கிறாரே கலைஞர். இந்த இடம் கூட அவர் மரணத்திற்கு பிறகு தளபதியின் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது என்பது தான் உண்மை.. எனவே போராட்டமே வாழ்வு... வாழ்வே போராட்டம்... என்ற கொள்கையில் இருந்து இளைஞர்கள் பின் வாங்கக்கூடாது என்பதை தான் கலைஞரின் வாழ்வு தமிழனுக்கு அழுத்தி சொல்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையில் இருந்து பின்வாங்காதவர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். கலைஞரின் பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுக-வினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


Tags : Vairamuthu ,artist , Honor , karunanidhi Memorial ,Vairamuthu Worship
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...