படகு பழுதால் குமரி மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

நித்திரவிளை: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறையை சேர்ந்தவர் ஷிபு (40).  இவருக்கு சொந்தமான  விசைப்படகில் ஷிபு உட்பட  குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 பேர், கேரளாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 20 பேர் மே மாதம் 2ம் தேதி கொச்சியில் இருந்து ஆழ்கடலில்  மீன்பிடிக்க சென்றனர். கடந்த 18ம் தேதி தித்திரா தீவு பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு விசைப்படகு     பழுதடைந்துள்ளது. உடனே மற்ற படகில் இருந்தவர்கள் பழுதடைந்த படகை கரைக்கு இழுத்து  வந்தனர்.  நேற்று மற்றொரு படகும் பழுதடைந்தது.

இதையடுத்து படகின் உரிமையாளர் ஷிபு  சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும்  படகில் உள்ள பாராசூட் உதவியுடன் கரையை நோக்கி  வருவதாக தெரிவித்துள்ளார்.  உறவினர்கள் இத்தகவலை மீன்பிடிச் சங்க  அலுவலகத்திலும், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆழ்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கையும் வைத்துள்ளனர்.
Tags : fishermen , The boat,falling, Kumari fishing ,fishermen
× RELATED தொடர் மழை கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிப்பு