×

உலக புகழ்பெற்ற கிராமிய நடன கலைஞர் ‘குயின்’ஹரீஷ் விபத்தில் பலி: முதல்வர் கெலாட் இரங்கல்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் உலக புகழ்பெற்ற கிராமிய நடன கலைஞர் ஹரீஷ் உட்பட 4 பேர் கார் விபத்தில் மரணமடைந்தனர்.ராஜஸ்தானின் ஜெய்சல்மாரை சேர்ந்தவர் ஹரீஷ் குமார். இவர் உலக புகழ்பெற்ற கிராமிய நடன கலைஞர். இவர், ‘குயின் ஹரீஷ்’ என்று  அழைக்கப்படுபவர். கூமார், கால்பிலியா, சாங், பவாய், சாரி உள்ளிட்ட கிராமிய நடனங்களை ஆடுவதில் வல்லவர். தனது நடனத்தின் மூலமாக உலக  அளவில் அங்கீகரிக்கப்பட்டவர். இந்நிலையில், நேற்று இவர் தனது உதவி கலைஞர்களுடன் காரில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜோத்பூர் அருகே கார் வந்தபோது  எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஹரீஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற 3 கலைஞர்களும்  உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஹரீஷ் தனது நடன  குழுவுடன் சென்றதாக தெரிகிறது.

விபத்தில் ஹரீஷ் இறந்ததற்கு முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘விபத்தில் நடன கலைஞர் ஹரீஷ் உள்பட 4 பேர் இறந்த  செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன். தனது வித்தியாசமான நடனத்தின் மூலமாக ஜெய்சல்மாருக்கு புதிய அடையாளத்தை கொடுத்தவர்  ஹரீஷ். அவரது மறைவு நடன கலைக்கு மிகப்பெரிய இழப்பாகும்,’ என டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Queen ,crashes ,Harish ,Chief Minister , World famous, 'Queen' Harish, Chief Minister Gelat ,mourning
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!