×

பலத்த காற்று, மழை காரணமாக மின்கம்பங்களில் தென்னை மட்டை விழுவதால் மின்தடை ஏற்படுகிறது: அமைச்சர் தங்கமணி விளக்கம்

ஈரோடு: காற்று, மழையால் மின் கம்பங்களில் தென்னை மட்டை விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனை சில மணிநேரத்துக்குள் ஊழியர்கள் சரி  செய்து வருகின்றனர்’ என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்திருக்கிறார். ஈரோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தை மின் மிகை மாநிலமாக வைத்துள்ளோம்.தற்போது  தேவைக்கு அதிகமாக காற்றாலை மின்சாரம், கூடங்குளம் அணு மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது.  தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கதவணை  மூலம் மின் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.  தற்போது பல பகுதிகளில் காற்று, மழை பெய்து வருகிறது. இதனால், மின் கம்பங்களில் தென்ன  மட்டை விழுந்து மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மரங்கள், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அங்கு மின் தடை  அடிக்கடி ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் ஊழியர்கள் சென்று சரி செய்வதற்கு 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது. இந்த  செய்தியைதான் மின் வெட்டு என கூறுகின்றனர். எனினும் மின் தடை ஏற்படும் பகுதியில் இரவு நேரத்திலும் மின் ஊழியர்கள் பணியாற்றி சரி செய்து  வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 16,200 மெகாவாட் அளவுக்கு உச்சபட்ச அளவு வந்துள்ளது. 16,500 மெகாவாட் மின்பயன்பாடு இருந்தால்கூட தேவையான  அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தொழிற்சாலைகளுக்கு மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளனர். கடந்த 27ம்  தேதி திடீரென காற்றாலை மின்சாரம் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தியில் இருந்து 100 மெகாவாட்டாக குறைந்துவிட்டது. அணுமின் நிலையத்தில்  உற்பத்தி செய்தால், குறைந்தது 8 மணி நேரம் ஆகும். அன்று ஒரு நாள் மட்டும், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால், மாலை 4 மணி நேரம்  தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் பயன்படுத்த சொல்லியிருந்தோம். பின்னர் 8 மணியளவில் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி  செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Tags : Heavy winds, rain, wires, Resistance, Minister Doughamani explains
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி