×

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் சாத்தியமானதே: சுப்ரமணியன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர்

தென் மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைகள் ஏராளம்; இவற்றை நிரந்தரமாக தீர்க்க பல முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், நிரந்தரமாக  தீர்க்க கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி ஆகிய நதிகளை இணைப்பது தான். அதை தான் இப்போது  மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்த திட்டம் அருமையான திட்டம்; பல ஆண்டுகளாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும், போதுமான கவனத்தை ஆளும்  கட்சியினர் செலுத்தாமல் இருந்தனர். பாஜ அரசு கடந்த முறை வந்தபின் இந்த திட்டங்கள் பற்றி வலியுறுத்தப்பட்டது. இ்ந்த நிலையில் , கோதாவரி -  காவரி நதி நீர் இணைப்பு தொடர்பாக தேசிய நீர் மேம்பாட்டு முகமை மூலம் அந்த திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

கோதாவரியில் ஜன்னல்பட் அல்லது அகிலபள்ளி அருகே கதவணை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து நாகார்ஜூனா சாகர் அணைக்கு தண்ணீர் எடுத்து  செல்லப்பட்டு, மீண்டும் சோமசீலா அணைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு ஆரணியாறு, பாலாறு வழியாக இறுதியாக காவரிக்கு தண்ணீர்  வரும் வகையில் நதிகள் இணைக்கப்
படுகிறது. இப்படி நதிகளை இணைத்து விட்டால், அப்புறம் எந்த பிரச்னையும் வராது; விவசாயிகள், பொதுமக்கள் என்று யாரும் பிரச்னை கிளப்ப  மாட்டார்கள். அவர்களுக்கு பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.  முதற்கட்டமாக கோதாவரியில் இருந்து காவிரி வரை மட்டுமே இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு காவிரியில் இருந்து -  குண்டாறு வரை நதிகள் இணைப்பு திட்டம் இரண்டாவது கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 125 டிஎம்சி வரை  கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். ஆனால், இந்த திட்ட அறிக்கை தயாரிப்பு பணி முழுமை அடைந்த பிறகே,  கோதாவரியில் இருந்து தண்ணீர் எப்படி கொண்டு வரப்படும் என்பதை முடிவு செய்த பிறகே எவ்வளவு டிஎம்சி கொண்டு வரப்படும் என்பது தெரிய வரும்.

முதலில் கோதாவரியில் இருந்து இரும்பு பைப் லைன் மூலம் கொண்டு வரப்போவதாக கூறினார்கள். இருப்பினும் தண்ணீரை கொண்டு வருவது  தொடர்பாக இரண்டு  திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசு கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழக  அரசு தரப்பிலும் இந்த திட்டம் தொடர்பாக தேசிய நீர் மேம்பாட்டு முகமையில் தனது கருத்தை தெரிவிக்கும்.யுஎஸ் கால்வாய் திட்டம், பனாமா கால்வாய் திட்டம், சீனாவில் ஒரு கால்வாய் திட்டம் எப்படி சாத்தியமானதோ அது போன்று கோதாவரி-காவிரி  இணைப்பு திட்டம் கட்டாயம் சாத்தியம் தான். இந்த திட்டம் நீண்ட கால திட்டம். இந்த திட்டம் முடிவுக்கு வர குறைந்தது 5 வருடத்திற்கு மேல் வரை  ஆக வாய்ப்புள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். இந்த திட்டம் வரவேற்கக்  கூடிய திட்டம் தான்.

இந்த திட்டத்தின் அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்த பிறகு தமிழக அரசு தனது கருத்தை தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு அளிக்கப்படும். இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் ₹60 ஆயிரம் கோடி வரை செலவாகலாம். மேலும், இந்த திட்டத்திற்கு நிதி எங்கிருந்து பெறுவது என்பதை மத்திய  அரசு தான் முடிவு செய்யும். இந்த திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகிறது.திட்ட அறிக்கை தயாரிப்பு பணி முழுமை அடைந்த பிறகே, கோதாவரியில் இருந்து தண்ணீர் எப்படி கொண்டு வரப்படும் என்பதை முடிவு செய்த  பிறகே எவ்வளவு டிஎம்சி கொண்டு வரப்படும் என்பது தெரிய வரும்.


Tags : Subramanian ,Godavari-Kaveri ,Cauvery Technology Group , Godavari-Kaveri ,connection,Subramanian, Chairman ,Cauvery Technology Group
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...