×

250 கோடி மதிப்பிலான 122 அறிவிப்புகளுக்கு ஜூன் 2வது வாரத்திற்குள் டெண்டரை முடிக்க வேண்டும்: அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் உத்தரவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் 250 கோடி மதிப்பிலான 122 அறிவிப்புகளுக்கு ஜூன் இரண்டாவது  வாரத்திற்குள் டெண்டர் விட்டு முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை அனைத்து செயற்பொறியாளர்களையும் அறிவுறுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், ஏரி, அணைகள் புனரமைத்தல், புதிதாக அணைகட்டுகள்  கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ₹4 ஆயிரம் கோடி செலவில் இப்பணிகள் நடக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற ேதர்தல் வருவதையொட்டி  அனைத்து பணிகளுக்கு டெண்டர் விட்டு முடிக்க கடந்த டிசம்பரில் தமிழக பொதுப்பணித்துறை தலைமை உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, தான் பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் எழுதியது. இதை  தொடர்ந்து அந்த பணிகளுக்கு கடந்த ஜனவரியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் முதல் வாரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.  இதையடுத்து டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களுக்குள், அதாவது கடந்த மார்ச் 10ல் தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம்  வெளியிட்டது. இதை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அலுவலக கட்டிடங்கள், மருத்துவமனைகளுக்கு  கூடுதல் கட்டிடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தடுப்பு சுவர், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், நீர்வளநிலவள திட்ட  சுற்றுச்சூழல் நிபுணர், அணைகள் புனரமைப்பு, புதிய கதவணை, தடுப்பணை கட்டுதல் உட்பட ₹250 கோடி மதிப்பிலான 122 அறிவிப்புகளுக்கான  டெண்டர் விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 26ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து  மீண்டும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் இறுதி செய்யும் பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விட்டு ஒப்பந்த நிறுவனத்ைத ேதர்வு  செய்ய பொதுப்பணித்துறை தலைமை அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.

Tags : ticket announcements ,Executives , 122 crores , 122 crores, week, June
× RELATED கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு