×

துபாயில் இருந்து தங்கம், சிகரெட், லேப்டாப் கடத்தி வந்த 2 பேர் கைது: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம், சிகரெட், லேப்டாப் கடத்திவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.துபாயில் இருந்து ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை  சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.அப்போது  தேவகோட்டையை சேர்ந்த பிரசாத் (28) என்பவரும் இளையான்குடியை சேர்ந்த  அப்துல்ரஹ்மான் (26) ஆகிய இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய்க்கு சென்றுவிட்டு சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் துபாயில்  உபயோகப்படுத்திய 14 பழைய மடிக்கணினிகளை எடுத்து வந்திருந்தனர். பழைய மடிக்கணினிகளை ஏன் எடுத்துவந்தீர்கள் என்று  அதிகாரிகள்  கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் எதுவும் அளிக்கவில்லை. அவர்களது சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது.

அதில் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த மடிக்கணினிகளுக்குள் சிறு சிறு தங்க கட்டிகள் மறைத்து  வைத்திருந்தனர். மேலும் அதிகாரிகள் பிரசாந்தை தனியறைக்கு அழைத்துச் சென்றும் சோதனை செய்தனர். இருவரிடம் இருந்தும் 750 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு 26 லட்சம். 14 மடிக்கணினிகளையும்  பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு  1 லட்சம் மேலும் 250,000 மதிப்புள்ள சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இரண்டு பயணிகளையும் கைதுசெய்து  விசாரிக்கின்றனர். அவர்கள் மடிக்கணினிகளை யாரிடம் இருந்து வாங்கி வந்தனர் என்றும் தீவிரமாக விசாரிக்கின்றனர். விமான சட்ட விதிகளின்படி பழைய  மடிக்கணினிகளை கொண்டுவர அனுமதி இல்லை. இருவரிடம் இருந்தும் மடிக்கணினி, சிகரெட் தங்கம் உட்பட ₹27.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Dubai , Gold, Cigarette ,Laptop ,Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...