×

உழவன் எக்ஸ்பிரசில் ஏற முயன்ற போது பிளாட்பாரம்-ரயிலுக்கு இடையில் சிக்கிய சிறுமியின் உயிரை மீட்ட ஆர்பிஎப் வீரர்

சென்னை: உழவன் எக்ஸ்பிரசில் ஏற முயன்ற போது பிளாட்பாரம்-ரயிலுக்கு இடையே சிக்கிய சிறுமியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு  படை வீரருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர் போன்ற  மாவட்டங்களுக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள்  பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தஞ்சாவூர்க்கு செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் 4வது  நடைமேடையில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு ெமதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பீகாரை சேர்ந்த அஸ்வனி குமார் என்பவர்  தன்னுடைய மகள் அனாமல் சர்மாவுடன் தான் வேலை பார்க்கும் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும் என்று வந்துள்ளார்.

அப்போது ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்திருப்பதை பார்த்த அஸ்வனி குமார் தன் கையில் வைத்திருந்த சூட் கேசையும், தோளில் ஒரு  மூட்டையை வைத்துக் கொண்டு தன்னுடைய மகள் அனாமல் சர்மாவின் கையில் ஒரு பையை கொடுத்து இருவரும் புறப்பட்டு சென்று கொண்டிருந்த  ரயிலில் ஓடிப்போய் ஏற முயற்சி செய்தனர்.
அப்போது தன்னுடைய மகளை ரயில் ஏற்றி விட்டு தான் ஏறலாம் என்று அவரை முதலில் ஏற்றியுள்ளார். அப்போது ரயில் சற்று வேகமாக செல்ல  ஆரம்பித்தவுடன் ஏற முயன்ற அனாமல் சர்மா நிலை தடுமாறி ரயில் படிக்கட்டில் விழுந்த போது அவருடைய கால் பிளாட்பாரம்-ரயிலுக்கு இடையே  சிக்கிக் கொண்டது. உடனே அஸ்வனி குமார் ஒரு கையில் சூட் கேசை வைத்துக் கொண்டு ரயிலில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த  தன்னுடைய மகளை தூக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் ரயில் வேகமாக புறப்பட ஆரம்பித்ததால் அவரால் தூக்க முடியவில்லை.

இந்நிலையில் வழக்கம் போல் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ஜோஸ்கான் என்பவர் ரயிலில் ஏற முடியாமல் சிறுமி ஒருவர் உயிருக்கு போராடிக்  கொண்டிருப்பதைப் பார்த்ததும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ்கான் வேகமாக ஓடிவந்து சிறுமியை ரயிலில் இருந்து வெளியே இழுத்து  காப்பாற்றினார். இதையடுத்து புறப்பட்ட ரயிலை நிறுத்தி அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஓடும் ரயிலில் ஏறக்கூடாது.  முன்கூட்டியே வர வேண்டும் என்று அறிவுரை வழங்கி அதே ரயிலில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி மற்றும் அவருடைய தந்தை  ஜோஸ்கான் மற்றும் பணியில் இருந்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில்  பதிவான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறுமியின் உயிரை காப்பாற்றிய போலீசார் ஜோஸ்கானை உயர்அதிகாரிகள் மற்றும்  ரயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : player ,RPF , Tilavan , climb ,expression, The RPF player
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...