×

அமர்நாத் செல்ல 1.10 லட்சம் பக்தர்கள் பதிவு

ஜம்மு: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை செல்வதற்காக ஒரு லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் பனி படர்ந்த இமயமலை உச்சியில் அமர்நாத் குகைக்கோயில் அமைந்திருக்கிறது. ஜூலை மாதத்தில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வருகிற ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது. 46 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவடைகிறது. யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இதுவரை ஒரு லட்சத்து 10ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர்.

Tags : pilgrims ,Amarnath , Amarnath, 1.10 lakhs, pilgrims, registered
× RELATED இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை