×

வெற்றி விளிம்பில் இந்தியா ஏ

ஹூப்ளி: இலங்கை ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அங்கீகாரமற்றது), இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கியுள்ளளது. ஹூப்ளி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 269 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 57 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ, 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில், இந்தியா ஏ அணி 372 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

அன்மோல்பிரீத் 60, சித்தேஷ் 58, பரத் 60, ராகுல் சாஹர் 84, ஜெயந்த் யாதவ் 53 ரன் விளாசினர். இதையடுத்து, 430 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய பானுகா ராஜபக்ச 110 ரன் விளாசினார். கமிந்து மெண்டிஸ் 33 ரன், சந்தகன் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் மட்டுமே இருக்க, இலங்கை ஏ அணி வெற்றிக்கு இன்னும் 220 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : India ,victory , Success, edge, India A.
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...