பிரெஞ்ச் ஓபன்: கால் இறுதியில் பெடரர்: போபண்ணா ஏமாற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் லியோனார்டோ மேயருடன் (68வது ரேங்க்) நேற்று மோதிய பெடரர் (3வது ரேங்க்) 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் குரோஷிய வீராங்கனை பெத்ரா மார்டிச் 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எஸ்டோனியாவின் கானெபியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் டோனா வேகிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மாரியஸ் கோபில் (ரோமானியா) ஜோடி 6-1, 5-7, 6-7 (8-10) என்ற செட் கணக்கில் செர்பியாவின் துசான் லஜோவிச் - ஜான்கோ திப்சாரெவிச் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

Related Stories:

>