சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் குத்தகைக்கு விடப்பட்டது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் மற்ற விமான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடிகளால் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 5 ஏடிஆர் விமானங்கள் மற்றும் ஒரு பி777 விமானம் என மொத்தம் 6 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போல கிங்பிஷர் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்ட பின் அதன் விமானங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகின.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை மீண்டும் எப்போது துவங்கும் என்பது தெரியாத நிலையில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பதற்காக அவை மற்ற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Jet Airways ,airport ,Chennai , Jet Airways,fleet,leased,Chennai airport
× RELATED திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை