×

தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: சீனா எச்சரிக்கை

அமெரிக்கா: தைவான் விவகாரத்தில் அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது. சீனப் பாதுகாப்புத்துறை அமைச்சரான வெய் ஃபெங் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியப் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று அமெரிக்காவை சாடினார்.

தைவானை தங்களிடம் இருந்து பிரிக்க நினைத்தால், என்ன விலை கொடுத்தாவது சண்டையிடுவதைத் தவிர தங்கள் நாட்டு ராணுவத்துக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார். இறுதி வரை சண்டையிடத் தயார் என்றும் வெய் ஃபெங் கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கமாக தைவானை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதுவே சீனாவின் ஆத்திரத்துக்கு காரணமாகியுள்ளது.

Tags : China ,Taiwan , China's ,separate Taiwan, China, never succeed,warns China
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...