×

திருச்சி மத்திய சிறையில் நன்னடத்தை தண்டனை கைதிகளில் 12 பேர் பணிகளை முடித்துவிட்டு சிறைக்குத் திரும்பாமல் இருந்ததாக குற்றச்சாட்டு

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் நன்னடத்தை தண்டனை கைதிகளில் 12 பேர், தங்களுக்குரிய பணிகளை முடித்துவிட்டு, இரவில் சிறைக்குத் திரும்பாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மத்திய சிறையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. சிறை வளாகத்தில் உள்ள தரிசு நிலத்தை மேம்படுத்தி, காய்கறித் தோட்டம், கரும்புத் தோட்டம், மீன்வளர்ப்புக் குட்டை ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. இப்பணிகளில் நன்னடத்தை தண்டனைக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

இவர்களை கேங் என்ற பெயரில், சிறையில் இருந்து, சிறை வார்டன்கள் அழைத்துச் செல்வது வழக்கம். இவ்வாறு, நேற்று அழைத்துச் செல்லப்பட்ட 54 பேரில், 12 பேர் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே, 12 பேரை அழைத்து வந்த சிறை அதிகாரி ஒருவர், மீண்டும், அவர்களை சிறையில் அடைக்காமல், இரவு நேரத்தில் அழைத்துச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Tiruchi Central Jail ,jail , Accused allegations,12 people,convicted,Tiruchi Central Jail ,not returning,jail
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!