புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மதியம் 12 மணியுடன் நிறைவடைவதால் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வாக இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் யார் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.


× RELATED புதுச்சேரியில் நீர்நிலைகள் தொடர்பான...