ஓட்டலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தததாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது வழக்குப்பதிவு

பாரிஸ்: ஓட்டலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தததாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் பாரிஸ் சென்ற நெய்மர், தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிரேசிலைச் சேர்ந்த இளம்பெண்ணையும் சொந்த செலவில் பாரிஸ் வரவழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ஆம் தேதி ஓட்டலில் தங்கி இருந்த அந்தப் பெண்ணை சந்திக்க குடிபோதையில் நெய்மர் சென்றதாகவும், அப்போது மிகவும் ஆக்ரோசத்துடன் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சாவ் பாலோ போலீசில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், நெய்மர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Neymar ,Brazilian ,cafe ,girls , Brazilian,footballer Neymar,sexually harassing,young girls,cafe
× RELATED ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல...