×

ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலையில் வெடி விபத்து: 82 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஷெர்ஷின்ஸ்க் நகரில், ரஷ்ய ராணுவத்தின், வெடிபொருள் தயாரிப்பு கூடம் மற்றும் அதுபற்றி தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. பெரும் புகைமண்டலத்துடன், வெடிபொருட்கள் உள்ளிட்டவை வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 82 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவதாவது; ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோ அருகில் டிஸ்சின்ஸ்க் நகரம் உள்ளது. இந்நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 38 ஊழியர்கள் மற்றும் 41 உள்ளூர் மக்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலை விபத்து காரணமாக 180க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தொழிற்சாலை விபத்து குறித்து ரஷ்யா நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : explosion ,factory ,Russia , Russia, factory, explosion crash
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...